Categories
மாநில செய்திகள்

“பாலியல் புகார்களை விசாரிக்க தனி கமிட்டி”…. பல்கலைக்கழகங்களுக்கு யூ.ஜி.சி. அதிரடி உத்தரவு….!!!!

பாலியல் புகார்களை விசாரிக்க தனி கமிட்டி அமைக்க பல்கலைக்கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் யூஜிசி உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக் குழு முக்கிய அறிவிப்பு ஒன்றை சுற்றறிக்கை அனுப்பியது. அந்த அறிக்கையில் பல்கலைக்கழக வளாகங்களிலும் கல்லூரி வளாகங்களிலும் பேராசிரியர்கள் மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அதேபோன்று எந்தவிதமான வன்முறை சம்பவங்களும் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற சம்பவங்களை விசாரிப்பதற்கு தனி கமிட்டி அமைக்க வேண்டுமென பல்கலைக்கழக மானியக் குழு நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |