தொண்டு நிறுவனத்திற்கு வந்த பணத்தை பயங்கரவாதத்திற்கு பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் காசா ஊழியர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
“உலக தொலைநோக்கு திட்டம்” என்ற கிறிஸ்தவ சர்வதேச தொண்டு நிறுவனம் உலகின் பல பகுதிகளில் செயல்பட்டு வருகின்றது. இந்த தொண்டு நிறுவனத்தின் கிளை பாலஸ்தீனத்தின் காசா என்ற பகுதியிலும் செயல்பட்டு வருகின்றது. இந்த கிளைக்கு ஆண்டு தோறும் கோடிக்கணக்கான பணம் தொண்டு சேவைக்காக உலகின் பல்வேறு இடங்களில் இருந்து நன்கொடையாக வருகின்றது. இதனை அடுத்து காசாவில் உள்ள இந்த தொண்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக முகமது இல்-ஹலாபி என்பவர் உள்ளார். கடந்த 2014-16 ஆம் ஆண்டு இடைவேளியில் தொண்டு நிறுவனத்திற்கு வந்த நிதியை சேவைக்கும் பயன்படுத்தாமல் பயங்கரவாத செயலுக்கு பயன்படுத்தியதற்கக முகமது இல்-ஹலாபி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த தொண்டு நிறுவனத்திற்கு வந்த நிதியை காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பிற்கு முகமது அனுப்பி வைத்ததாகவும், மேலும் இந்நிதியை கொண்டு இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, 2016-ம் ஆண்டே ‘உலக தொலைநோக்கு திட்டம்’ தொண்டு நிறுவனத்தின் காசா கிளை நிர்வாக இயக்குனர் முகமது இல்-ஹலாபியை இஸ்ரேல் போலீசார் கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட முகமது இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டுதல், தொண்டு நிறுவன நிதியை பயங்கரவாத செயலுக்கு பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் முகமது மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இஸ்ரேல் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்ததுள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் கோர்ட்டில் இன்று நடந்த விசாரணயில் முகமது குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொண்டு நிறுவனத்திற்கு வந்த நிதியை பயங்கரவாத செயலுக்கு பயன்படுத்த காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பிற்கு முகமது வழங்கியது நிரூபிக்கப்பட்டுள்ளதாக கோர்ட்டு தெரிவித்துள்ளது. மேலும், குற்றவாளி முகமதுவிற்கு தண்டனை விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்த கோர்ட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.