Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“சாய் பல்லவி நடிக்கும் படத்தின் விளம்பர நிகழ்ச்சி”…. அலைமோதிய ரசிகர்கள் கூட்டம்… பவுன்சராக மாறிய ராணா…!!!!

படத்தின் விளம்பர நிகழ்ச்சியின்போது சாய்பல்லவிக்கு பவுன்சராக மாறிய ராணாவுக்கு ரசிகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

மலையாள சினிமாவில் வெளியான ”பிரேமம்” படத்தின் மூலம் நடிகையாக பிரபலமானவர் சாய்பல்லவி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் சாய்பல்லவி ராணாவுடன் சேர்ந்து நடிக்கும் விரத பர்வம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். இதனால் அவரை பார்ப்பதற்காக ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகின்றது.

சாய்பல்லவி உடன் சேர்ந்து செல்ஃபி எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கூட்டமாக வந்து விடுகின்றன. அப்படி ரசிகர்கள் வந்தபோது படத்தின் கதாநாயகன் ராணா சாய் பல்லவிக்கு பவுன்சராக மாறி இருக்கின்றார். மேலும் சாய்பல்லவிக்கு குடை பிடித்து நின்று இருக்கின்றார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்களை சாய்பல்லவியின் ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு நன்றி தெரிவித்திருக்கிறார். சாய்பல்லவி, ராணா விளம்பர நிகழ்ச்சிகளில் மட்டும் அல்லாமல் படப்பிடிப்பிலும் பவுன்சராக இருந்ததாக பேட்டியில் கூறி இருக்கின்றார்.

Categories

Tech |