ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் பரோட்டா குருமாவில் பல்லி கிடந்துள்ளது. இந்த பரோட்டாவை சாப்பிட்ட நான்கு பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மயக்கமடைந்த நான்கு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து ஹோட்டல் நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியதற்கு ஓட்டல் உரிமையாளர் மழுப்பலாக பதில் கூறியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோட்டல் குருமாவில் பல்லி கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹோட்டல் சாப்பாட்டில் இதுபோன்று கரப்பான்பூச்சி, பல்லி, தவளை கிடப்பது சமீபத்தில் தொடர்ந்து நிகழ்ந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.