தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் முதல்வர் ஸ்டாலின் உத்தரவுக்கு ஏற்ப தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் பிடிஆர் தெரிவித்துள்ளார். ஆனால் ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய இரண்டு மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் படுத்தப் பட்டுள்ளன.
இந்நிலையில் தேசிய பென்ஷன் திட்டத்திலிருந்து ராஜஸ்தான் சத்தீஸ்கர் ஆகிய இரண்டு மாநிலங்களும் வெளியேறி உள்ளதாக பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையம் தலைவர் சுப்ரதா பந்தோபத்யாய் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் அரசு ஊழியர்களுக்கு உத்தரவாதத்தோடு பென்ஷன் வழங்கும் புதிய பென்ஷன் திட்டம் தொடங்குவதற்கு PFRDA திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார் இந்த திட்டம் செப்டம்பர் மாதத்தில் அறிமுகபடுத்தபடலாம் என்றும் அறிவித்துள்ளார்.