புதுமணத் காதல் தம்பதியை வெட்டிக்கொலை செய்த வழக்கில் கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் தந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகள் சரண்யா. இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மோகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பின் காதலாக மலர்ந்தது. இவர்கள் காதல் பற்றி சரண்யாவின் வீட்டிற்கு தெரியவர பெற்றோர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து சரண்யாவுக்கு உறவினர் ஒருவரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்ததால் சரண்யா மோகனை சென்ற ஆறு நாட்களுக்கு முன்பாக சென்னையில் திருமணம் செய்துகொண்டார். இதனால் சகோதரர் சக்திவேல் கோபமடைந்தார். ஆகையால் சரண்யாவிடம் விருந்துக்கு வருமாறு அழைத்து இருக்கின்றார். அதை நம்பி கணவருடன் சரண்யா சொந்த ஊருக்கு வந்திருக்கின்றார்.
அப்போது சக்திவேல் மற்றும் அவரின் உறவினர் ரஞ்சித் இருவரும் சரண்யா மற்றும் அவரின் கணவரை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். இதையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இதையடுத்து வழக்கு பதிவு செய்து கொலை செய்த இருவரையும் கைது செய்தார்கள். பின் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து போலீசார் அவர்களை மத்திய சிறையில் அடைத்தனர்.
அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் ரஞ்சித் கூறியதாவது, ஒன்றரை வருடங்களாக சரண்யாவிடம் பேசி பழகி வந்த நிலையில் அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு அவரின் அண்ணன் சக்திவேலிடம் கூறினேன். அவரும் சம்மதம் தெரிவித்தார். இதனால் சரண்யாவை திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என சந்தோஷத்தில் இருந்த நான் சரண்யாவின் காதல் விவகாரம் பற்றி தெரிய வந்தது. அதனால் கோபத்தில் இருந்தேன். பின் சரண்யா மோகனை திருமணம் செய்து கொண்டதால் அவர் மீதான ஆத்திரம் அதிகரித்தது. இதனால் அண்ணன் சக்திவேலிடம் பேசி மனதை மாற்றி காதல் ஜோடியை கொலை செய்ய முடிவு செய்தோம் என கூறினார்.