Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கான்கிரீட் கலவையுடன் சென்ற லாரி விபத்து…. 7 பேர் படுகாயம்…. தீவிர விசாரணையில் போலீசார்….!!!!!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கான்கிரீட் கலவையுடன் சென்ற லாரி விபத்துக்குள்ளாகி 7 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜகடை அருகில் நத்தம் மலை கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்த மல்லப்பா  என்பவர் மலை மீது வீடு கட்டி வசித்து வருகின்றார். அவரது வீட்டிற்கு காங்கிரட் போடுவதற்காக கிருஷ்ணகிரி பெத்ததாளபள்ளி பகுதியிலிருந்து லாரியில் கான்கிரீட் கலவை கலக்கும் இயந்திரத்துடன் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் பூங்கொடி (23) இந்திராணி (45) ஜோதி (30) லோகநாதன் (23) கோபி (40) ஐ.பிகானப்பள்ளி சென்னப்பன்(29) போன்றோர் சென்றிருந்தனர். இந்த லாரியை  பெத்ததாளபள்ளியை சேர்ந்த அஜித் குமார் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.

இவர் நேற்று காலை ஏக்கல் நத்தம்  மலைப்பாதையில் எந்திரத்துடன் சென்ற லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென பின்னோக்கி சென்று சாலையோரம் உள்ள 30 அடி ஆழ பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் டிரைவர் உட்பட 7 பேரும் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் அவர்களது சத்தம் கேட்டு அந்த வழியாக வந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இந்த விபத்து பற்றி மகாராஜகடை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |