Categories
தேசிய செய்திகள்

மனைவி நடத்தையில் சந்தேகம்…. தந்தையே தன் குழந்தைக்கு செய்த கொடூரம்…. பெரும் சோகம்….!!!!

ஆந்திரமாநிலம் கர்னூல் மாவட்டம் ஆர்வக் கல்லு பகுதியில் ஆட்டோ டிரைவர் ரங்கா முரளி வசித்து வருகிறார். இவருடைய மனைவி வீணா ஆவார். இந்த தம்பதியினருக்கு முனி வர்ஷா என்ற 6 மாத ஆண் குழந்தை இருந்தது. இப்போது ரங்கா முரளி நன்னூர் பகுதியிலுள்ள பேரடைஸ் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதில் ரங்கா முரளி தன மனைவி வீணாவிடம் நான் கருப்பாக இருக்கிறேன், ஆனால் பிறந்த குழந்தை சிவப்பாக இருப்பதால் அந்த குழந்தை எனக்கு பிறக்கவில்லை எனகூறி அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வந்த ரங்காமுரளி மனைவியிடம் எனக்கு பிறக்காத குழந்தை உயிருடன் இருக்கக்கூடாது என்றுகூறி பூட்டால் குழந்தையின் தலையில் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் குழந்தை ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டது. அத்துடன் முரளி, வீணாவையும் கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து வீணாவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது குழந்தை இறத்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலறிந்து வந்த காவல்துறையினர் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைகாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தந்தையே தன் குழந்தையை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |