Categories
தென்காசி

“நாய் கடித்து பாதிக்கப்பட்ட 30 பேர்”… மாவட்ட நகராட்சி தலைவி நிவாரண உதவி….!!!!!

நாய் கடித்து பாதிக்கப்பட்ட 30 பேருக்கு நகராட்சி தலைவி நிவாரண உதவி வழங்கியுள்ளார்.

தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடியில் நேற்று முன்தினம் 30க்கும் மேற்பட்டவர்களை நாய் கடித்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்கள்.

இதையடுத்து தகவலறிந்த நகராட்சித் தலைவி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருபவர்களையும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களையும் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறியிருக்கிறார். மேலும் அவர்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கியுள்ளார்.

இதையடுத்து மக்களை கடித்த நாயை கண்டு பிடிக்குமாறு நகராட்சி தலைவி உத்தரவிட்டதையடுத்து ஊழியர்கள் நாயை கண்டு பிடித்து மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டார்கள்.

Categories

Tech |