Categories
மாநில செய்திகள்

7,153 மதுபாட்டில்கள்….. காவல்துறையின் அதிரடி செயல்….. மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம், கர்நாடகா மற்றும் ஆந்திரா எல்லைப் பகுதிகளில் உள்ளதால் அண்டை மாநிலங்களில் இருந்து சட்டவிரோதமாக மதுபானங்கள் கடத்தல் செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்து வருகிறது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை என மூன்று மதுவிலக்கு அமல் பிரிவு காவல் பிரிவுகள் அமைக்கப்பட்ட தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏப்ரல், மே மாதங்களில் சட்டவிரோதமாக விற்பனைக்கு கடத்திவரப்பட்ட கர்நாடகா, ஆந்திரா, கோவா மாநில மதுபாட்டில்கள் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

இது 1, 300 லிட்டர் அதாவது 7 ஆயிரத்து 153 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை அனைத்தையும் ஓசூர் அடுத்த சானமாவு வனப்பகுதியில் மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி ஆகியோர் முன்பு ஜேசிபி வாகனத்தால் உடைக்கப்பட்டு குழிதோண்டி புதைக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு மட்டும் 10 லட்சம் இருக்குமென கூறப்படுகின்றது. மதுபானங்கள் உடைப்பால் கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள மது பிரியர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.

Categories

Tech |