Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“பூட்டியிருந்த வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை”…. 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைப்பு….!!!!!

ஓமலூர் அருகே பூட்டியிருந்த வீட்டில் 32 பவுன் நகையை கொள்ளையடித்த 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் அருகே இருக்கும் பாகல்பட்டி ஓம்சக்தி நகரைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றார். இவருடைய மனைவி தமிழ்கொடி. சென்ற 11ஆம் தேதி கனகராஜ் வழக்கம்போல் வேலைக்கு செல்ல அவரின் மனைவி தமிழ்கொடி உறவினர் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்றுவிட்டார்.

இதையடுத்து வேலை முடித்த பிறகு வீட்டுக்கு வந்த கனகராஜ் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 32 பவுன் நகை கொள்ளை போனது தெரிய வந்ததையடுத்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.

போலீசார் விசாரணையில் கொள்ளையடித்தது ராஜ்குமார், ராஜமாணிக்கம், பாபு, வெங்கடேஷ் என்பது தெரியவந்தது. இவர்கள் ஏற்கனவே நகை பறிப்பு வழக்கில் கைதாகி சேலம் மத்திய சிறையில் இருப்பது தெரியவந்தது. இதனால் போலீசார் சிறையில் இருந்த நால்வரையும் காவலில் எடுத்து தொளசம்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து இரண்டு நாட்கள் விசாரணை நடத்தினார்கள். பின் அவர்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட 22 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

Categories

Tech |