பீட்சா டெலிவரி செய்ய வந்த பெண்ணை நான்கு பெண்கள் சேர்ந்து தர்ம அடி கொடுக்கும் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரலாக பரவி வருகிறது. அந்த வகையில் தற்போதும் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றது. அதாவது மத்தியபிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அந்த நேரத்தில் உதவிக்காக மக்களிடம் கெஞ்சியுள்ளார். ஆனால் யாரும் அவருக்கு உதவி செய்யவில்லை இதில் சோகமான விஷயம் என்னவென்றால் 4 பெண்கள் சேர்ந்து அவரை தாக்கும் போது அங்கிருந்த யாரும் உதவ முன்வரவில்லை என்பதுதான். சமூக வலைதளங்களில் வைரல் ஆன இந்த வீடியோவில் 4 பெண்கள் ஒன்று சேர்ந்து பீட்சா டெலிவரி பெண்ணை கடுமையாக தாக்குவது போன்று தெரிகின்றது.
A female employee was thrashed by 4 women in Madhya Pradesh's Indore. The video of the incident shows four women beating up the victim, a pizza chain employee, using sticks and fists, for allegedly staring at them.#Indore #MadhyaPradesh #Dominos #Pizza #Assualt #Viral #India pic.twitter.com/t6SsmhiiW8
— Anjali Choudhury (@AnjaliC16408461) June 13, 2022
ஒரு பெண் தன் கையில் ஒரு குச்சியையும் வைத்திருக்கின்றார். அதன் மூலமாக அந்தப் பெண்ணை அடிக்கின்றார். இந்த வீடியோவில் பாதிக்கப்பட்ட பெண் அலறித் துடித்து அழுவதையும் நம்மால் காணமுடிகின்றது. மேலும் அந்த பெண்ணின் முடியை இழுத்து தள்ளி சாலையில் வீசியுள்ளார். இறுதியாக எப்படியோ எழுந்து இந்த நான்கு பெண்களிடமும் இருந்தும் தப்பிக்க அந்தப் பெண் ஒரு வீட்டை நோக்கி ஓடுவதையும் நாம் இந்த வீடியோவில் காண முடியும். இதற்கிடையில் தாக்கப்பட்ட பெண் பீட்சா டெலிவரி செய்பவராக வேலை செய்து வருவதாக கூறப்படுகின்றது. பாதிக்கப்பட்ட பெண் தங்களை முறைத்துக் கொண்டு இருந்ததாகவும் பின்னர் தன்னை தாக்கியதாகவும் 4 சிறுமிகள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் இந்த வீடியோ இணையதளத்தில் தற்போது வெளியாகி வேகமாக பரவி உள்ள நிலையில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.