தமிழ் சினிமாவில் நடிகரும் இயக்குனருமான டி. ராஜேந்திரனுக்கு கடந்த 19ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், இதயத்திற்கு செல்லக்கூடிய இரத்த குழாயில் அடைப்பு இருக்கிறது என்று கூறினார்கள். இதனால் அவருக்கு அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்காக சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டு செல்வார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கமலஹாசன் மருத்துவமனைக்கு நேரில் சென்று டி.ஆரை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் டி.ஆர் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்த கமலஹாசன், “நலமுடன் திரும்பி வாரும் சகோதரரே” என்று அவர் பதிவிட்டுள்ளார்.