Categories
மாநில செய்திகள்

“கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பு”….. கேள்வி கேட்ட பக்தருக்கு மண்டை உடைப்பு?…. பெரும் பரபரப்பு….!!!!

பெரம்பலூர் அருகே சிவாலயத்தில் அர்ச்சகர் தாக்கியதால் பக்தர் ஒருவருக்கு மண்டை உடைந்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓகளூரைச் சேர்ந்த ராகவேந்திரன் தனது நண்பர்களுடன் வாலீஸ்வரர் கோயிலுக்கு சென்றுள்ளார். நண்பகல் 12 மணிக்கு நடை சாற்றப்படும் நேரத்தில் சென்றதால் ராகவேந்திரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் கோயிலுக்குள் செல்ல முற்பட்டதால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் அர்ச்சகர் செல்லப்பா என்பவர் தட்டால் தாக்கி பக்தரை கீழே தள்ளிவிட்டதாகவும் அதனால் ராகவேந்திரனுக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்ததாகவும் கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து ராகவேந்திரன் மற்றும் அவரது நண்பர்களுடன் அர்ச்சகர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் போலீசில் புகார் அளிக்கவே, இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |