Categories
மாநில செய்திகள்

கோவில் கும்பாபிஷேகம்…. ஹெலிகாப்டரில் சென்ற குடும்பத்தினர்…. வியப்பில் கிராம மக்கள்….!!!

கோவில் கும்பாபிஷேகத்தை காண்பதற்காக குடும்பத்துடன் ஹெலிகாப்டரில் சென்றுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி அருகே தீத்தாம்பட்டி கிராமத்தில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பாக பாலசுப்பிரமணியன் குடும்பத்துடன் கும்மிடிப்பூண்டிக்கு குடியேறினார். இவருக்கு 2 மகன்கள் இருக்கும் நிலையில் ஒருவர் தந்தையுடன் சேர்ந்து இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மற்றொரு மகன் ஜவுளி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் பாலசுப்ரமணியனின் மகன் நடராஜன் மற்றும் அவருடைய பேரன் மோஹித்துக்கு ஹெலிகாப்டரில் செல்ல வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை இருந்துள்ளது .

இதனால் பாலசுப்ரமணியன் தன்னுடைய மகன் மற்றும் பேரனின் ஆசையை நிறைவேற்றும் விதமாக தன்னுடைய சொந்த ஊரான தீத்தாம்பட்டியில் நடைபெறும் அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக தனியார் நிறுவன ஹெலிகாப்டர் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளார். இந்த ஹெலிகாப்டரில் நடராஜன், அவருடைய மனைவி சுந்தரவள்ளி, மகன், பேரன் உட்பட 5 பேர் சென்றுள்ளனர்.

இவர்கள் ஹெலிகாப்டரில் தீத்தாம்பட்டி ஊரை 5 முறை சுற்றி வந்துள்ளனர். அதன்பின் கோவிலில் சென்று சாமி தரிசனம் செய்தனர். இவர்கள் கோவிலை விட்டு வெளியே வந்தவுடன் ஊர் பொதுமக்கள் பலர் நடராஜன் குடும்பத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதனையடுத்து ஊர் மக்கள் சிலர் ஹெலிகாப்டரில் சென்று மகிழ்ந்துள்ளனர். அதன்பிறகு நடராஜன் ஹெலிகாப்டரில் மீண்டும் தன்னுடைய ஊருக்கு சென்று விட்டார் ‌

Categories

Tech |