லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படத்தில் தனுஷ் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது.
தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் விஜய். இவரின் நடிப்பில் அண்மையில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்பொழுது இவர் வம்சி பைடிப்பல்லி இயக்கத்தில் தளபதி 66 திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். தளபதி 67 திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.
இத்திரைப்படத்தின் அறிவிப்பு விஜய்யின் பிறந்த நாளன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் விஜய்யின் பிறந்த நாளன்று தளபதி 66 திரைப்படத்தின் அப்டேட் மட்டும் தான் வெளியாகும் என கூறப்படுகின்றது. விஜய்யின் 67 திரைப்படத்தில் தனுஷ் வில்லனாக நடிக்க இருப்பதாக சொல்லப்படுகின்றது. இது மட்டும் உண்மையாக இருக்கக் கூடாது என விஜய் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
காரணம் லோகேஷ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் தான் பெரிதாக பேசப்பட்டது. மேலும் இது விஜய் சேதுபதியின் படம் தான் என விமர்சனம் எழுந்த நிலையில் விஜய்க்கு வில்லனாக தனுஷ் நடித்தால் நிச்சயம் அவர்தான் பெயர் வாங்குவார் என கூறுகின்றார்கள் ரசிகர்கள்.