Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஐஸ்வர்யா போட்ட ஒத்த போஸ்ட்”….. வெச்சு செய்யும் நெட்டிசன்ஸ்…!!!!!

ஐஸ்வர்யாவின் போஸ்டை பார்த்த நெட்டிசன்கள் பங்கம் செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வருகின்ற ஐஸ்வர்யா. இவர் நடிகர் தனுஷை சென்ற 2004ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்த இவர்கள் சென்ற ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தனர். அதன்பின் இருவரும் அவரவர்களின் கெரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர்.

ஐஸ்வர்யா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். இவர் ஒர்க் அவுட் செய்யும் போட்டோ, வீடியோ, ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என பகிர்ந்து வரும் நிலையில் தற்போது கடற்கரையில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை பகிர்ந்து இருக்கின்றார்.

அண்மைக்காலமாக இவரின் பதிவைப் பார்த்த நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இந்த நிலையில் இவரின் தற்போதைய பதிவை பார்த்த நெட்டிசன்கள், அப்பா காசு அதிகமா இருந்தா இப்படி பண்ண தோன்றும் என்ன பங்கம் செய்து வருகின்றார்கள். மேலும் மற்றொருவர் கடலையும் காற்றையுமே அடக்கக் கூடிய வல்லமை பெற்ற கடல் மாதா ஐஸ்வர்யா என பகிர்ந்திருக்கிறார்.

Categories

Tech |