Categories
Uncategorized உலக செய்திகள்

சூடான் நாட்டில்…. இரு தரப்பினர் இடையே மோதல்…. 100 பேர் பரிதாப பலி….பெரும் சோகம்….!!!!

சூடான் நாடு வடகிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. மேலும் இந்த நாட்டில் உள்நாட்டு போர் நிலவி வரும் நிலையில், இந்த போரினால் ஆப்பிரிக்க பழங்குடியின மக்கள் தங்கள் சொந்த இடங்களை விட்டு, வேறு இடங்களுக்கு தஞ்சம் அடைந்தனர். அதிலும் குறிப்பாக, அந்த நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள டார்ஃபுர் மாகாணத்தில் இருந்து லட்சக்கணக்கான ஆப்பிரிக்க பழங்குடியின மக்கள் வேறு இடங்களுக்கும்  இடம் பெயர்ந்துள்ளனர்.

ஆனால் தற்போது போர் சற்று குறைந்ததையடுத்து, இடம் பெயர்ந்தவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பியவாறு உள்ளனர். இந்நிலையில் ஏற்கெனவே கைவிடப்பட்ட பகுதிகளை அரேபியர்கள் கைப்பற்றி, விவசாயம் போன்றவற்றில் ஈடுபட்டும்  வருகின்றனர். இதையடுத்து நிலத்தின் சொந்த உரிமையாளர்களுக்கும் மற்றும் போரினால் கைவிடப்பட்ட நிலத்தை கைப்பற்றியவருக்கும் இடையே உரிமைச்சண்டையானது, அவ்வப்போது நடந்து வருகிறது.

மேலும் இச்சண்டையின் போது இரு தரப்பு மோதல்களினால், உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த மோதலால் இரு தரப்புக்கும், பல கிளர்ச்சிப் படைகளும் உருவெடுத்துள்ளன. இதையடுத்து, டார்ஃபுர் என்ற மாகாணத்தின் மேற்கு பகுதியில் உள்ள குல்பஸ் நகரில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள ஆப்பிரிக்க பழங்குடியின மக்களின் வீடுகளுக்கு, அரேபிய கிளர்ச்சியாளர்கள் தீயிட்டு கொளுத்தி உள்ளனர்.

இதன் பிறகு, இரு தரப்பினற்கும் இடையே மோதல் வெடித்து, மேலும், இந்த மோதலினால், இதுவரையில் 100 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் படுகாயமும் அடைந்துள்ளனர். மேலும் இந்த மோதலையடுத்து, அந்த பகுதியில் ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் இத்தாக்குதல் நடந்த பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேறி வருகின்றனர்.

 

Categories

Tech |