சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி இந்திரா நகர் 2-வது வீதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சரவணன் அதே பகுதியில் விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி அழுது கொண்டே தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சரவணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.