Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்….! “70-க்கும் மேல் இணையதளங்கள் முடக்கம்”….. பரபரப்பு….!!!!

இந்தியாவில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான 70க்கும் மேற்பட்ட இணையதளங்களை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். நபிகள் நாயகம் குறித்து பாஜகவை சேர்ந்த நபுர் ஷர்மா சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை கண்டித்து ‘டிராகன் போர்ஸ் மலேசியா’ என்ற பெயரில் ஹேக்கர்கள் இணையதளங்களை முடக்கி வருகின்றனர். குறிப்பாக மஹாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் ‘உங்களுக்கு உங்கள் மதம், எனக்கு என் மதம்’ என்ற ஆடியோ மற்றும் வாசகங்களை ஹேக்கர்கள் வெளியிட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |