பல்வேறு சுற்றுலா இடங்களை ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தளமாக விளங்குகிறது. இங்கு தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் பகுதியில் காத்திருந்து சூரியன் உதயமாகும் காட்சியை கண்டனர்.
இதனையடுத்து பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை, காமராஜர் மணிமண்டபம், காந்தி நினைவு மண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலை, பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரைப் பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களை கண்டு ரசித்துள்ளனர். இதனால் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.