ஊருக்குள் புலி சுற்றி திரிவது போல் வைரலாகி வரும் வீடியோவை யாரும் நம்ப வேண்டாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சேஷன் நகரில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த 2 மாதங்களாக அருகில் இருக்கும் வன பகுதியில் இருந்து புலி ஒன்று புகுந்து மக்கள் தங்கள் வீட்டில் வளர்க்கும் ஆடு, மாடு, நாய்கள் போன்றவற்றை வேட்டையாடி வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளிடம் ஊருக்குள் புகுந்து வேட்டையாடும் புலியை பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதனால் வனத்துறையினர் வனப்பகுதியில் 2 ட்ரோன் கேமராவை பொருத்தி புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது. ஊருக்குள் புலி சுற்றி திரிவது போல் வைரலாகி வரும் வீடியோவை யாரும் நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.