சிங்கப்பூர் நாட்டு பொதுமக்கள் அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் அரசின் நடவடிக்கை குறித்து பிளாக்பாக்ஸ் எனும் நிறுவனம் 758 பேரிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்தியுள்ளது.
இதனை அடுத்து விலைவாசியைக் கட்டுப்படுத்துவதில் அரசு 55% மோசமாக செயல்படுவதாகவும், 37% சிறப்பாக செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் கொரோனா காலத்திற்குப்பின் உடைகள், உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றிற்கு குறைவாக செலவிடுவதாக பத்தில் ஒன்பது பேர் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து 35% பெட்ரோல் விலை உயர்வு குறித்தும், 66% வீட்டு பொருள்களின் விலை உயர்வு குறித்தும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.