Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திருவிழாவிற்கு சென்ற குடும்பம்…. திடீரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

கார் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பூதிமடைபுதூர் பகுதியில் அண்ணன்மார்  திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாவிற்காக மகேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் குருமந்தூர்-கொளப்பலூர் சாலையில் காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த நாகராஜ், மாதம்மாள், பத்திரமா, பல்லவி, திவ்யா உள்ளிட்ட 7 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |