நர்சிங் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா(21) என்ற மகள் இருந்துள்ளார். இவர் சேலம் அருகே இருக்கும் தனியார் நர்சிங் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ரம்யா தனியார் மருத்துவமனையில் நர்சிங் பயிற்சி பெற்று அங்கு உள்ள விடுதியில் தங்கியுள்ளார். நேற்று முன்தினம் விடுதியில் வைத்து ரம்யா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம்பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரம்யா எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.