தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்ற நயன்தாரா, நானும் ரவுடிதான் திரைப்படத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஏழு வருடங்களாக இவர்கள் காதலித்து வந்தார்கள். இந்த நிலையில் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் சென்னையில் உள்ள ஈசிஆரில் இருக்கும் ஷெரட்டன் கிராண்ட் ஸ்டார் ஹோட்டலில் இவர்களின் திருமணம் கடந்த ஜூன் 9-ம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தங்கள் திருமணத்திற்காக ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என்றும், அனைத்து செலவுகளையும் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி நிறுவனம் ஏற்றுக் கொண்டது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாரா தன் திருமண வீடியோவை நெட்ப்ளிக்ஸுக்கு 25 கோடிக்கு விற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நயன்தாராவின் பழைய வீடியோக்கள் மற்றும் பேட்டிகளை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.