Categories
உலக செய்திகள்

“எங்களிடமிருந்து தைவானை பிரித்தால்”…. போரைத் தொடங்க தயங்கமாட்டோம்….. பிரபல நாட்டிற்கு சீனா எச்சரிக்கை…!!!!!!!

1949 ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டுப் போரின்போது சீனாவும் தைவானும் பிரிந்தது. தைவான் தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடர்ந்து கூறிக் கொண்டே வருகிறது. அது மட்டுமல்லாமல் அவசியம் ஏற்பட்டால் தைவானை கைப்பற்ற படை பலத்தைப் பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் என சீனா மிரட்டல் விடுத்து வருகின்றது. இதன்காரணமாக தைவான் சீனா இடையேயான பதற்றம் தொடர்ந்து நீடித்துக் கொண்டே வருகின்றது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் தனக்கு ஆதரவாக இருந்து வரும் அமெரிக்கா தன்னை தற்காத்துக் கொள்வதற்காக ஆயுதங்களை வழங்கி வருகின்றது.

இதற்கு சீனா கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றது. இந்த சூழ்நிலையில் தைவானை  ஆக்கிரமிக்க நினைத்தால் அமெரிக்க ராணுவம் அதில் தலையிட்டு பாதுகாக்கும் மீது அமெரிக்க ஜனாதிபதி அண்மையில் சீனாவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அதனை தொடர்ந்து அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீன ராணுவம் தயார் நிலையில் அடிக்கடி போர் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. இதனால் இரு நாடுகளுக்கிடையேயான எல்லையில் பதற்றம் அதிகரித்து இருக்கின்றது. இந்த நிலையில் இத்தகைய பரபரப்பான சூழலில் அமெரிக்க ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டினும்,சீன ராணுவ மந்திரி வெய் பெங்கேவும் நேற்று முன்தினம் முதன்முறையாக நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

இதுபற்றி அவர் பேசும்போது தைவானை சீனாவில் இருந்து பிரிக்க யாராவது துணிந்தால் போரை தொடங்க சீன ராணுவம் தயங்காது. அதற்காக எந்த விலையைக் கொடுக்கவும் சீனா தயாராக உள்ளது என கூறியுள்ளார். மேலும் அதனைத் தொடர்ந்து அவர் பேசும்போது சீனா தைவான்  சுதந்திரம் என்ற சதியை முறியடித்து தாய்நாட்டில் ஒருங்கிணைப்பு உறுதியுடன் நிலைநிறுத்தும். தைவான் எப்போதும் சீனாவின் தைவான்தான் சீனாவை கட்டுப்படுத்துவதற்கு தைவானை பயன்படுத்தும் எண்ணம் ஒருபோதும் வெற்றி பெறாது என தெரிவித்துள்ளார். அப்போதுதான் தைவான் மீதான ஸ்திரத்தன்மை  மேலும் சீர்குலைக்கும் நடவடிக்கை களை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தி அதற்கான அமெரிக்காவின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

Categories

Tech |