Categories
மாநில செய்திகள்

மாணவர்களே….! “பழைய பஸ் பாஸ் செல்லும்”….. அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்…..!!!!

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி மாணவர்கள் பழைய பயண அட்டையை பயன்படுத்தி பேருந்தில் பயணம் செய்யலாம் என போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான விடுமுறை முடிந்து நாளை மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இவர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் உடன் சேர்த்து கூடுதலாக 250 பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்கள் பழைய பயண அட்டையை பயன்படுத்தி அரசு பேருந்தில் பயணம் செய்யலாம் என போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கூறியுள்ளார்.

Categories

Tech |