மெகா வெற்றியடைந்த “விக்ரம்” திரைப்படத்தை தொடர்ந்து கமல் மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் புது படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் தேவர் மகன் படத்தின் தொடர்ச்சி போன்ற கதைக்களத்தில் உருவாகிறதாம்.
இப்போது படம் பற்றிய முக்கிய அப்டேட் என்னவென்றால் இத்திரைப்படத்தில் முதன் முறையாக இளையராஜா மற்றும் ஏ.ஆர்.. ரஹ்மான் இருவரும் இணைந்து இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக தேவர் மகன் திரைப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார்.
ஆகவே அதன் தொடர்ச்சியாக உருவாகும் இப்படத்திற்கும் இளையராஜா இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்று அவரையும் படத்தில் இணைய கேட்டுக் கொண்டதாக கோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறது.