Categories
மாநில செய்திகள்

பலத்த சூறைக்காற்று….. “30 அடிக்கு மேல் கடல் சீற்றம்”….. பீதியில் மக்கள்….!!!!

தனுஷ்கோடியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் பொதுமக்கள் கடலில் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா பகுதியில் திடீரென்று சூறைக் காற்று வீச தொடங்கியது. இதனால் தனுஷ்கோடி, பாம்பன் மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீன் இறங்குதளத்தை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதேபோல் அரிச்சல்முனை பகுதியில் பொதுமக்கள் கடலுக்குள் இறங்குவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்புக்கு அருகே நின்று சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கின்றனர். கடல் அலைகள் 30 அடிக்கு மேலாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் மக்கள் பீதியில் உள்ளனர்.

Categories

Tech |