Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

குழந்தை மீது 2 முறை ஏறி இறங்கிய கார் சக்கரங்கள்… பதறவைக்கும் சிசிடிவி காட்சி…. நாமக்கல்லில் பரபரப்பு…!!

குழந்தை மீது கார் மோதியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டணம் நடுத்தெருவில் கூலி தொழிலாளியான கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 வயதுடைய தருண் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தருண் வீட்டிற்கு அருகே விளையாடி கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த காரை நோக்கி தருண் ஓடி உள்ளான். அதனை கவனிக்காத ஓட்டுனர் காரை திருப்புவதற்காக பின்னோக்கி இயக்கியபோது தருண் மீது காரின் சக்கரங்கள் ஏறி இறங்கியது. பின்னர் ஓட்டுநர் காரை முன்னோக்கி இயக்கியபோது 2-வது முறையாக குழந்தை மீது காரின் சக்கரங்கள் ஏறி இறங்கியதால் தருணுக்கு படுகாயம் ஏற்பட்டது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக குழந்தையை மீட்டு ராசிபுரத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் கார் சக்கரங்கள் குழந்தை மீது ஏறி இறங்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |