பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோர் விருப்ப ஓய்வு பெறுவதால் சேவையில் எந்த வித பாதிப்பும் ஏற்படாது என அந்நிறுவன தலைமை பொது மேலாளர் சந்தோசம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோர் இன்று விருப்ப ஓய்வு பெறுகிறார்கள். இது குறித்துப் பேசிய தலைமை மேலாளர் சந்தோசம், 78,550 பேர் இன்று விருப்பு ஓய்வு பெறுவதாகவும், இதில் சென்னை வட்டத்தில் மட்டும் 2,699 பேர் விருப்ப ஓய்வு பெறுவதாக தெரிவித்தார்.
சென்னையில் 40 எக்ஸ்சேஞ்ச் அலுவலகங்களில் அதிகாரிகள், ஊழியர்கள் இல்லாத சூழல் ஏற்பட்டிருப்பதாகவும், இருப்பினும் சேவையை பாதிப்பில்லாமல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும் புதிய இணைப்பு பெற வழக்கமான முறையில் பதிவு செய்யலாம், அதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.