Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“விக்கிக்கு நயன் கொடுத்த காஸ்ட்லியான மேரேஜ் கிப்ட்”…. அடேங்கப்பா இத்தனை கோடியா…????

திருமணத்திற்கு நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு பல கோடி மதிப்பிலான பரிசை வழங்கியுள்ளாராம்.

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்ற நயன்தாரா நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ்சிவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஆறு வருடங்களாக இவர்கள் காதலித்து வந்தார்கள். இந்த நிலையில் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் சென்னையில் உள்ள ஷெரட்டன் கிராண்ட் ஸ்டார் ஹோட்டலில் இவர்களின் திருமணம் நேற்று முன் தினம் காலை 10.25 மணிக்கு நடைபெற்றது.

இவர்களின் திருமணமானது பலத்த போலீஸ் பாதுகாப்பில் நடைபெற்றுள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் திரைப்பட பிரபலங்களான சாருக்கான், ரஜினிகாந்த், மணிரத்னம், கார்த்தி, போனி கபூர், ராதிகா சரத்குமார், இயக்குனர் விஜய், அட்லீ என பலர் கலந்து கொண்டார்கள்.

திருமணத்தின்போது நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் பல கோடி மதிப்புள்ள நகைகளை பரிசாக வழங்கியதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனுக்கு பல கோடி மதிப்புள்ள பரிசை வழங்கி இருக்கின்றாராம். அந்த பரிசு என்னவென்றால் 20 கோடி மதிப்பிலான பங்களா ஒன்றை வாங்கி விக்னேஷ்சிவனுக்கு பரிசாக வழங்கி இருக்கின்றாராம். மேலும் நயன்தாரா விக்னேஷ் சிவனின் அம்மா மற்றும் தங்கைக்கு பல லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை பரிசாக ஏற்கனவே வழங்கியதாக தகவல் வெளியானது. இதையறிந்த ரசிகர்களோ தலைவினா சும்மாவா என சொல்லி வருகின்றார்கள்.

 

Categories

Tech |