Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சாலையில் சென்றுகொண்டிருந்த கார்…. திடீரென நடந்த விபரீதம்…. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!!!

ஓடும் காரில்  ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் ஆபிரகாம் பண்டிதர் என்னும் நகரை சேர்ந்தவர் அசார். இவர்  சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவர்  தனது குடும்பத்தினருடன் நேற்று திருச்சிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் அவருடன் சேர்ந்து 5 பேர் பயணம் மேற்கொண்டனர். தஞ்சை மருத்துவ கல்லூரி சாலையில் கணபதி நகர் அருகே சென்ற போது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென அதிக அளவில் புகை வெளிவந்தது.

உடனடியாக இதனை பார்த்த அசார்  காரை ஒரு ஓரமாக நிறுத்தி வைத்து விட்டு காரில் இருந்தவர்களை பத்திரமாக கீழே இறங்குமாறு தெரிவித்துள்ளார். இதனையடுத்து அனைவரும் காரில் இருந்து கீழே இறங்கியுள்ளனர். அதன்பின் காரின் முன்பகுதியை திறந்து பார்த்த போது திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி உடனடியாக தஞ்சை தீயணைப்பு காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆனால் அதற்குள் அந்த பகுதியில் இருந்த பொதுமக்களும் ஓடி வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் அருகிலிருந்த வங்கியிலிருந்து தீயணைக்கும் கருவிகளை எடுத்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் தஞ்சை மாவட்ட தீயணைப்பு அலுவலர் மனோகரன் உத்தரவின் பெயரில் நிலைய அலுவலர் மற்றும் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இதில் காரின் முன்பகுதி சேதம் அடைந்துள்ளது. ஓடும் காரில் ஏற்பட்ட தீயை சரியான நேரத்தில் பார்த்து அணைத்ததால் 5 பேர் உயிர் பிழைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |