Categories
மாநில செய்திகள்

“நாளை மறுநாள் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும்” அன்பில் மகேஷ் உறுதி….!!!

நாளை மறுநாள் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிகல்வித்துறை அமைச்சர் தெரிவித்ததாவது: “கோடை விடுமுறை முடிந்து ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் அனைத்தும் திட்டமிட்டபடி அனைத்து அடிப்படை வசதிகளும் சரியாக உள்ளதா? என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது. அப்படி கூடுதலாக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் வந்தால் பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |