பாகிஸ்தான் நாட்டினுடைய முன்னாள் அதிபரான பர்வேஸ் முஷாரப் உயிருக்கு போராடிய நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தற்போது துபாயில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை அவர் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஷாரப்பின் உறுப்புகள் இயங்கவில்லை எனவும் மிகவும் மோசமான நிலையில் அவர் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி அவரின் குடும்பத்தார் தெரிவித்ததாவது, முஷாரப் 21 நாட்களாக மருத்துவமனையில் தான் இருக்கிறார்.
அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து விட்டது. மீண்டும் அவர் உயிர் பிழைத்து வருவது நடக்காத ஒன்று. அவரின் உறுப்புகள் செயலிழந்துவிட்டன. அவர் கஷ்டப்படாமல் இருக்க பிரார்த்தியுங்கள் என்று கூறியிருக்கிறார்.