இஸ்ரேல், சிரிய நாட்டின் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலத்த காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை நேரத்தில் சிரிய நாட்டினுடைய தலைநகர் டமாஸ்கஸை நோக்கி இஸ்ரேல் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் மேற்கொண்டது. சிரிய நாட்டைச் சேர்ந்த வான் பாதுகாப்பு அமைப்பு தங்களை நோக்கி வீசப்பட்ட ராக்கெட்டுகளில் பெரும்பாலானவற்றை சுட்டு வீழ்த்தி விட்டது.
எனினும் இந்த ராக்கெட் தாக்குதலில் ஒரு நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், இதனால் அதிக பொருட்சேதம் உண்டாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த நபர், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.