Categories
மாநில செய்திகள்

முஸ்லிம்களுக்கு நல உதவி…. கலெக்டர் வெளியிட்ட செம சூப்பரான அறிவிப்பு….!!!!

தமிழகத்திலுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஸ்கள், இமாம்கள், அரபி ஆசிரியர்கள், மோதினார்கள், பிலால், தர்காக்கள், முஸ்லிம் அனாதை இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்கள் என அனைவரும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார். அவ்வாறு பதிவு செய்தவர்களுக்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

இவர்கள் அனைவரும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொள்ளலாம். அதில் விருப்பம் உள்ளவர்கள் விருதுநகர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்ற முகவரியை அணுக வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு முஸ்லிம்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |