Categories
மாநில செய்திகள்

சம்பளம் கிடையாது…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த மூன்று நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் வருகின்ற ஜூன் 13ஆம் தேதி முதல் ரேஷன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக அறிவித்தனர்.

இதையடுத்தே ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் பிடிக்கப்படும் என கூட்டுறவு சங்க பதிவாளர் அறிவித்துள்ளார். மேலும் மக்களுக்கு ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு மாற்றாக பணியாளர்களை ஏற்பாடு செய்ய உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |