Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வேட்டியால் முகத்தை மூடிய வாலிபர்…. மூதாட்டி பாலியல் பாலாத்காரம்…. போலீஸ் விசாரணை…!!

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நெகமம் அருகே இருக்கும் ஒரு கிராமத்தில் 65 வயது உடைய மூதாட்டி வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் அப்பகுதியில் இருக்கும் தென்னந்தோப்பில் மூதாட்டி மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற மர்ம நபர் வேட்டியால் மூதாட்டியின் முகத்தை மூடியுள்ளார். பின்னர் அந்த நபர் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து மூதாட்டி தனது கணவரிடம் அழுதுகொண்டே தெரிவித்துள்ளார்.

அதன்பின் மூதாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கட்டிடத் தொழிலாளியான நாகராஜன் என்பவர் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் நாகராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |