தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் அருவியில் கோடை விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வருகை அதிகரித்து வந்தது. இதற்கிடையே நீர்வரத்து திடீரென அதிகரித்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும், அருவியில் பரிசல் இயக்கவும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதனால் கோடை விடுமுறையை கழிக்க திட்டமிட்ட சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
கடந்த 3 நாட்களாக தடைவிதிக்கபட்டிருந்த நிலையில், நீர்வரத்து குறையத்தொடங்கியதால் இன்று மீண்டும் அனுமதி வழங்கி மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி குளிக்கவும், படகு சவாரி செய்யவும் குளிக்கச் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.