விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கவும், போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைபிடிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறையினர் எடுத்து வருகின்றனர். சென்னை பெருநகரில் பகுப்பாய்வு செய்ததில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் 15ம் தேதி வரையிலான கால பகுதியில் இரு சக்கர வாகன விபத்துகளில் 98 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 841 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இதில் ஹெல்மெட் அணியாமல் பயணித்ததில் 80 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் 18 பின்னிருக்கை பயணிகள் உயிரிழந்தனர் மற்றும் 714 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் 127 பின்னிருக்கை பயணிகள் காயமடைந்துள்ளனர். எனவே, விபத்துகளை கட்டுப்படுத்தவும், மே 23ம் தேதி (திங்கட்கிழமை) முதல் சென்னையில் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை நபரும் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேலூரில் இன்று முதல் பைக் ஓட்டுபவர் மற்றும் பின்னால் இருப்பவர் ஆகிய 2 பேரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அப்படி போடாவிட்டால் இனி அபராதம் வசூலிக்கப்படும் என்று எஸ்பி ராஜேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார்.