Categories
உலக செய்திகள்

கொரோனா பரிசோதனைக் கருவி…. விற்பனையில் முறைகேடு…. அமைச்சர் திடீர் கைது….!!!!

உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது. முழு ஊரடங்கு மற்றும் தடுப்பூசி என பல்வேறு நடவடிக்கையால் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. இந்நிலையில் கருணா கருவிகள் விற்பனை விவகாரம் வியட்நாமில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அந்த நாட்டிலுள்ள “வியட் ஏ டெக்னாலஜி கார்ப்பரேஷன்”என்ற நிறுவனம் நாடு முழுவதும் கொரோனா பரிசோதனை கருவிகளை விற்பனை செய்து வந்தது.

ஆனால் அந்தக் கருவியின் உண்மையான விலையை உயர்த்தி அதிக விலைக்கே விற்பனை செய்வதற்கு சுகாதாரத்துறைக்கு லஞ்சம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து இந்த விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் குயன் தான் லாங் மற்றும் முன்னாள் அறிவியல் துறை அமைச்சரும், ஹனோய் நகர மேயருமான சூ காக ஆன் ஆகியோர் போலீசாரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களைத் தவிர சுகாதார அமைச்சகஅதிகாரிகள் மற்றும் ராணுவ ஜெனரல் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Categories

Tech |