Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திடீரென கேட்ட துப்பாக்கி சுடும் சத்தம்…. முன்னாள் ராணுவ வீரரின் விபரீத முடிவு…. போலீஸ் தீவிர விசாரணை….!!

முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேரூர் சங்கர் நகர் பகுதியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான ஜெயபிரசாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு குமாரி சாந்தி என்ற மனைவி உள்ளார். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியினருக்கு பிரீத்தி என்ற மகள் உள்ளார். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. மேலும் ஜெயபிரசாத் ஓய்வு பெறுவதற்கு முன்பே முறைப்படியாக புதுப்பித்த பாடி எண் 40727 -12 என்ற எண் கொண்ட டி.பி.பி.எல். துப்பாக்கி ஒன்றை வைத்திருந்தார். இந்நிலையில் ஜெயபிரசாத் கடந்த 8 மாதங்களாக நாகர்கோவிலில் உள்ள தனியார் நிறுவனத்தில் வங்கி ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பும் பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில் குமாரி சாந்தி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ஜெயபிரசாத் படுக்கையறையில் இருந்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டுள்ளது.

இந்நிலையில் பதற்றமடைந்த சாந்தி அவர் அறையில் சென்றுபார்த்த போது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதனை பார்த்த குமாரி சாந்தி கதறி அழுதுள்ளார். இதுகுறித்து குமாரி சாந்தி சுசீந்திரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஜெயபிரசாத்தின் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு துப்பாக்கியில் ஜெயபிரசாத்தின் கைரேகை உள்ளதா என ஆய்வு செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அருகில் வசிப்பவர்களிடம் ஜெயபிரசாத்தின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |