மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள பள்ளபட்டி கிராமத்தில் கார்த்திக்ராஜா(20) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெருங்குடியில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக்ராஜா தேர்வு எழுதுவதற்காக கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர் மதுரை-தூத்துக்குடி நான்கு வழி சாலையில் காரியாபட்டி அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த டிப்பர் லாரி கார்த்திக் ராஜாவின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த கார்த்திக் ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று கார்த்திக் ராஜாவின் உடலை கைப்பற்றி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.