ஜமாபந்தியில் 3 பேருக்கு நத்தம் சிட்டா நகலும், 12 பேருக்கு பட்டா மாறுதல் உத்தரவும், 5 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்குவதற்கான ஆணையும் வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தில் கடந்த மாதம் 25ஆம் தேதி ஜமாபந்தி நடைபெற்று வந்துள்ளது. இந்த தாலுகாவிற்கு உட்பட்ட கிராம மக்கள் ஜமாபந்தியில் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கை மனுக்களை கொடுத்துள்ளனர். ஜமாபந்தி நேற்று முன்தினம் முடிவடைந்து உள்ளது. கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி தலைமையில் நடந்த ஜமாபந்தியில் பட்டா மாறுதல்கள், அரசு உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 402 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
அதில் நத்தம் சிட்டா நகல் 3 பேருக்கும், முதியோர் உதவித்தொகை வழங்குவதற்கான ஆணை 5 பேருக்கும், பட்டா மாறுதல் உத்தரவு 12 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கி உள்ளார். அதில் எட்டயபுரம் தாசில்தார் கிருஷ்ணகுமாரி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரகுபதி, வட்டதுணை ஆய்வாளர் கோட்டைச்சாமி, நில அளவையர் கார்த்திக், எட்டயபுரம் வருவாய் ஆய்வாளர் சித்ராதேவி உட்பட பலர் பங்கேற்றனர்.