Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வங்கி வாடிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில்…. “35 பயனாளிகளுக்கு ரூ 1 கோடியே 95 லட்சம் கடனுதவி”…. வழங்கிய கலெக்டர்….!!!!

வங்கி வாடிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் 35 பயனாளிகளுக்கு ரூ ஒரு கோடியே 95 லட்சம் மதிப்பிலான கடன் உதவியை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 75வது சுதந்திர தின நாள் அமுத பெருவிழாவை முன்னிட்டு அனைத்து தனியார்த்துறை, பொதுத்துறை வங்கிகள் சேர்ந்து வாடிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கியுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சி 2021-22 ஆம் நிதி ஆண்டில் 2997 பயனாளர்களுக்கு 176 கோடியில் கடனுதவி வழங்கப்பட்டு உள்ளது. அதற்கான நிதி அறிக்கையை ஸ்டேட் வங்கி தூத்துக்குடி மாவட்ட மண்டல மேலாளர் முருகானந்தம் வழங்கியுள்ளார்.

இதை தொடர்ந்து முன்னோடி வங்கி,தட் கோ, எச்.டி.எப்.சி வங்கி சேர்ந்து  8 விவசாயிகளுக்கு மானிய விலையில் ரூ 35 லட்சம் மதிப்பில் டிராக்டர் மற்றும் கடன் உதவிக்கான உத்தரவு கடிதம் என 35 பயனாளிகளுக்கு மொத்தம் ஒரு கோடியே 95 லட்சம் மதிப்பில் கடன் உதவிகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் நபார்டு வங்கி மண்டல மேலாளர் சுரேஷ் ராமலிங்கம், ரிசர்வ் வங்கி அலுவலர் மோகன்குமார், தூத்துக்குடி மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் துரைராஜ் வங்கியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

Categories

Tech |