Categories
உலக செய்திகள்

12 அதிவிரைவு காவல் படகுகள் ஒப்படைப்பு…. வியட்நாம் நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஜ்நாத் சிங்…!!!

வியட்நாமில் இந்திய நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 12 அதிவிரைவு காவல் படகுகளை ஒப்படைக்க கூடிய நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு மந்திரியான ராஜ்நாத்சிங் பங்கேற்றிருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி இந்திய நாட்டில் மேக் இன் இந்தியா திட்டத்தை கடந்த 2014ஆம் வருடம் செப்டம்பர் மாதத்தில் துவக்கி வைத்தார். உள்நாட்டிலேயே உற்பத்தியாகும் பொருட்களை ஊக்குவிப்பதற்காக இத்திட்டம் செயல்படுகிறது. இது மட்டுமல்லாமல் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் பிற நாடுகளுக்கும் கொடுக்கப்படுகின்றன. இந்நிலையில் மத்திய பாதுகாப்பு மந்திரியான ராஜ்நாத்சிங் வியட்நாமிற்கு சென்றிருக்கிறார்.

அங்கு ஹாங் ஹா என்னும் நகரத்தில் இருக்கும் கப்பல் கட்டும் தளத்தில் இந்திய நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 12 அதிவிரைவு காவல் படகுகளை வியட்நாம் நாட்டிடம் ஒப்படைக்க கூடிய நிகழ்ச்சி நடந்தது. அதில் பங்கேற்ற அவர் தெரிவித்ததாவது, 10 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பில் 12 அதிவிரைவு காவல் படகுகள் கட்டப்பட்டிருக்கின்றன.

இந்த திட்டத்திற்கான வேலைகள் நன்றாக முடிவடைந்திருக்கின்றன என்பதனை குறிப்பதற்காக இந்த விழா நடக்கிறது. நம், மேக் இன் இந்தியா மேக் ஃபார் தி வேர்ல்ட் திட்டத்திற்கு சிறந்த உதாரணமாக இத்திட்டம் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |