ஜெர்மனியின் ஹீன்ஸ் மாகாணத்தை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் சுற்றுலாபயணம் மேற்கொண்டனர். இதையடுத்து சுற்றுப் பயணம் சென்ற மாணவர்கள் நேற்று பெர்லின்நகரிலுள்ள சாலை ஒன்றில் நின்று கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு அதிவேகமாக வந்த கார் ஒன்று சாலை ஓரம் நின்று கொண்டிருந்த மாணவ-மாணவிகள் மீது வேகமாக மோதி விட்டது. இதனை தடுக்க முயன்ற ஆசிரியை மீதும் கார் மோதியது.
இதனால் பள்ளி ஆசிரியை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அத்துடன் 9 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோட முயற்சி செய்த கார் டிரைவரை அங்கு இருந்தவர்கள் மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதன்பின் கார் டிரைவரை காவல்துறையினர் கைது செய்தனர். இதில் கைது செயப்பட்ட நபர் அமெரிக்காவை சேர்ந்த ஜெர்மனியில் வசித்து வரும் நபர் என்று தகவல் வெளியாகியுள்ளது..