Categories
உலக செய்திகள்

சீனாவின் பிரபல மாகாணத்தில் கனமழை…. குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி பாதிப்பு….!!!!

மத்திய சீனாவில் உள்ள ஹெனான் என்ற மாகாணத்தில் கனமழை  பெய்து வருகிறது. இதன் காரணமாக, நகர் பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதையடுத்து தாழ்வான பகுதிகளில் 1.3 மீட்டர் வரை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் வெள்ளத்தில் சிக்கித் தவித்தனர்.

இந்நிலையில் தீயணைப்புத் துறையினர் வெள்ளம் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகளுக்குச் சென்று, மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். மேலும் ஹெனான் என்ற மாகாணத்தின் ஷாவ்கான் என்ற பகுதியில், சுமார் 40-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் சீனாவில் உள்ள தெற்கு பிராந்தியத்தில் கனமழைக்கான எச்சரிக்கையும்  விடுக்கப்பட்டுள்ளது. இதனால், கனமழைக்கான, மஞ்சள் நிற எச்சரிக்கை மற்றும் கடுமையான வெப்ப சலன காலநிலைக்கு நீல நிற எச்சரிக்கையும்,தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் சீனாவில் உள்ள மேற்கு பகுதியில் பரவலாக மழையின் தாக்கம் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |